நினைத்தாலே இனிக்கும்..





Biro Tata Negara,Candi Kura,Langkawi










Buat BBQ bersama geng







Mesyuarat Guru-Guru Data







Mandi- manda di Gunung Jerai










Snokling Di Pulau Pangkor







Memandu kereta golf, Sg.Petani











Naik feri ke Pulau Langkawi...










"பேய்கள் ஜாக்கிரத்தை"

7 comments:

  1. கல்லூரி சோலையில் எனது பயணம்....

    கனத்த இதயத்தோடு காலெடி வைத்தேன்...
    கல்லூரி என்ற சோலையில் முட்கள் இருக்குமோ என்று...
    கிடைத்ததோ அழகிய பூஞ்சோலைகள்...
    இந்த இருளனுக்கும் விரித்தன தனது பூக்களின் இதழ்களை...

    முதலில் அறிமுகம் கொண்டோம்...
    பின்பு ஆனந்தம் கண்டோம்...
    ஏட்டினில் கற்றது ஏனோ கொஞ்சம் கொஞ்சம்...
    இனிய நண்பர்களிடம் பெற்றது... இன்னும் கெஞ்சும்...

    தினம் தினம் பேருந்து பயணம்...
    தெரியாத உறவுகளின் விழிகளோடு விளையாட்டு...
    உரிமையில்லா, உதடுகளின் உளறலோடு ஆரம்பம்...
    அழகாய் மலர்ந்தது பேருந்து சிநேகம்...

    ReplyDelete
  2. ஓவியங்கள் ஒளிந்தன அவளது விழியழகில்...
    உறக்கமும் தொலைந்தது அவளது இருவிழியசைவில்...
    தானாய் வளர்ந்தது என்னுள்ளும் காதல்...
    தனியாய் அலைந்தது எனது மனம் மட்டும்...

    துரத்தி சென்றேன் அவளது நிழலை...
    தொடும்முன் மறைந்தது அவளது நினைவு...
    தானாய் மறைய நானா காரணம்?...
    அவளா சொன்னால் அனைத்தும் முடித்து.

    அவளிடம் எனது விருப்பம்....

    நேரம் போவது அறியாமல்...
    இரவும் பகலும் இணைவது தெரியாமல்...
    உதடுகளால் வார்த்தைகள் உதிராமல்...
    மௌன மொழியால் உனது விழிகளோடு மட்டும்...
    உரையாடிட... இந்த ஜென்மத்தையும்...
    எனது இதயத்துடிப்பையும்...
    ஒருமுறை ஏற்பாயோ?....
    உனது நினைவுகளின் உன்னவனாக என்னை...

    ReplyDelete
  3. பூக்கள் பறிப்பதற்கு அல்ல..
    பார்வையால் ரசிப்பதற்கு என்றுரைத்த தோழியே...
    ஏன் பிரிந்து சென்று
    என் இதயத்தை எரித்து கொன்றாய்...

    நட்பு என்ற ஒரு புள்ளியில்,
    பல வண்ணங்களான எங்கள் உள்ளங்கள்....
    இணைந்து, பிணைந்து வரையப்பட்ட,
    ஒரு ரங்கோலி எங்கள் கல்லூரி...

    கல்லூரியில் கசிகின்ற கண்ணீர்த்துளிகள்...
    ஆனந்தத்தின் வெளிப்பாடாய் இதயங்களில் இன்று...
    போட்டிகளில் விளையாடினோம் அடிபட்டோம்....
    ஆறிப்போனது அன்பு நண்பர்களின் ஆறுதல்களால்...






    உணவுவேளை ஓய்வுபெற்றது புத்தகம்...
    அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து....
    அழகாய் பகிர்ந்து உண்டோம்...
    உணவை மட்டுமல்ல, நட்பின் நல்லுறவையும்...

    அன்பாய் அறிவூட்டினார் ஆசிரியர்...
    அதிலும் மெறிகூட்டி என்னையும் தேற்றினர்...
    புரியாத புதிர்களையும் விளையாட்டாய் விளங்கவைக்கும்...
    அன்பான கூட்டம் எங்கள் நண்பர்கள் கூட்டம்...

    ஆசிரியர் இல்லா நேரம்..
    அழகிய கலைகள் அரங்கேறும்...
    நண்பனும் ஆசிரியராய் மேடை மேலே...
    அற்புதமாய் அறிவூட்டியது கல்லூரி நாளே...

    ReplyDelete
  4. நான்கு சுவருக்குள் ஓருலகம்...
    நாங்கள் தங்கிய விடுதியறை...
    வீட்டின் நினைவும் நிழலாய் இங்கே...
    விசித்திரமான உறவுகளின் உண்மையான வெளிப்பாடு அங்கே...

    நண்பர்கள் மட்டுமே உறவுகள் இங்கே...
    நடனமும் பாட்டும் நடந்தது அங்கே...
    குழுவாய் சேர்ந்து கல்வி பயின்றோம்...
    குறைகளை மறந்து மகிழ்ச்சி கண்டோம்...


    பெண்மையை காமமும் காதலும் சூழும் காலம்...
    அதனை மாற்றியது எங்கள் கல்லூரி நட்புக்காலம்...
    எத்தனை எத்தனை சந்தோஷங்கள் வகுப்பிலே...
    அனைத்தும் பெற்றோம் நண்பர்களின் வரவிலே...




    இளங்கதிர் துளிர்விடும்
    காலைபொழுது ...
    இலையின் நுனியோடு..
    என்ன கோபமோ...
    கதிர்களோடு உறவாடி,
    காற்றோடு கலக்கும் பனித்துளி...

    இயற்கையில் தான் எத்தனை அதிசயம்...
    அனைத்தையும் மிஞ்சும்...
    எங்கள் கல்லூரி நட்புக்கள்...
    அதை விட அதிசயம்...

    நண்பர்களின் குடும்பங்களுடன் அறிமுகவிருந்தோம்பல்...
    மகிழ்ச்சியாக உணவருந்தி,
    உறவுகளோடு கலந்துரையாடி மகிழ்ந்த...
    அதுஒரு அழியாத அறிமுக சுற்றுலா.....

    ReplyDelete
  5. நெருப்புடன் உறவாடும்
    பனிக்கட்டியின் நிலை...
    ஒவ்வொரு நாளும்
    வலியொரு நகர்த்தினோம்...
    கல்லூரியின் கடைசி தினங்களை...

    அனைத்தும் முடிய நண்பர்களும் பிரிய....
    வந்தது பிரிவிடை நாள்...
    அன்று ஏனோ கொஞ்சம் கனத்த நெஞ்சம்...
    இன்று அத்தனையையும் நினைக்க நெஞ்சம் ஏங்கும்...

    கடவுளை நம்புவதில்லை நான்...
    கண்ணீர் விட்டு அழுதேன்
    கடந்த கல்லூரி வாழ்வை...
    மீண்டும் பெறும் வரம் வேண்டி...




    ஞாபக மறதி
    நிறைய எனக்கு....
    ஏனோ..
    நண்பர்களின்
    நினைவுகள் மட்டும்...
    மறக்க மறந்துவிடுகிறேன்...

    மரணம் ஒருநொடி வலி......
    பிரிவு பல நொடி மரணம்......
    மரணத்தின் மடியில் தொடர்கின்றேன்...
    வாழ்வின் அடுத்த பக்கங்களை....

    உலகின் ஏதோ மூலையில், ஏதோ தேடலில்...
    சற்றே திரும்பினேன் கல்லூரியில் நினைவில்...
    கண்கள் நிரம்பின காட்சிகளால் அல்ல... கண்ணீரால்......
    புரியாத வலி...

    ReplyDelete
  6. வலியை சொல்ல வார்த்தைகள் அல்ல...
    இன்னும் மொழியே பிறக்கவில்லை...

    எனது உள்ளம் வலியால் உதறியதின்....
    விளைவால் விழுந்த எண்ணங்களின் எழுச்சி..
    எழுந்து நின்று எழுத்துக்களாய் இங்கே...
    இது முடிவல்ல.... நினைவுகளின் தொடக்கம்தான்...

    தொடரும்.......
    எனது கடந்த நிஜங்களின்...
    நிழல்களின் பதிப்பு உங்களுக்கு...
    உங்களது உண்மையான நட்பின்...
    நினைவுகளே பரிசு எனக்கு...


    நட்புடன்......
    -- கா.இராஜகுமார்...

    ReplyDelete